College Students Thanks to CM
College Students Thanks to CM

கல்லூரி மாணவர்களின் பருவத் தேர்வுகளை ரத்து செய்த முதல்வருக்கு மாணவர்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

College Students Thanks to CM : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. கல்வி, விளையாட்டு, பாடத்திட்டம் சாராத செயல்பாடு என கவனம் செலுத்தி கொண்டிருந்த மாணவர்கள், கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் தேர்வுகள் குறித்தும், எதிர்காலம் குறித்தும் பெரும் கவலையுடன் இருந்தனர். இது மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுருந்தது.

இதனால் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை சில தீரவுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் கல்லூரி தேர்வுகள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர், இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளைத் தவிர்த்து மற்ற தேர்வுகளிலிருந்து கல்லூரி மாணவர்களுக்கு விலக்கு அளிப்பதாக முதல்வர் அறிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், செமஸ்டர் தேர்வு எழுத விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்களுக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

காலேஜ் மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. பருவ தேர்வுகள் ரத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி உத்தரவு!

மேலும், யுஜிசி, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவின் வழிகாட்டுதல் படி தேர்வெழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்பு, மாணவர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. #Arrear, #ArrearExamCancelled, #EPSFOR2021 என்ற ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்யத் தொடங்கினர்.

இன்னும் சில மாணவர்களோ, ஒரு படி மேலே சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கட் அவுட் அமைக்கத் தொடங்கி விட்டனர். ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் “அரியர் மாணவர்களின் அரசனே நீ வாழ்க” என்பது போன்ற கட் அவுட்களை வைத்துள்ளனர்.

மேலும் பல மாணவர்கள் முதல்வருக்கு வீடியோ மூலமாக நன்றி தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில், முதல்வரின் நடவடிக்கைக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

இது குறித்து கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி அவர்கள், மாணவர்களின் மன உளைச்சலுக்குத் தீர்வு காணவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறினார். வாக்கு வங்கிக்காக தேர்வுகளை ரத்து செய்யவில்லை எனவும் கூறினார்.

இதனை தொடர்ந்து, ஆன்லைன் கிளாஸ் வகுப்புகளில், முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாணவர்கள் முதல்வரின் புகைப்படத்தை, தங்களது profile pic ஆக வைத்துள்ளனர் . மேலும், பல்வேறு தமிழ் நாளிதழ்களில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி, தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு சார்பாக, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில்,”மாணவர்களின் மனித கடவுள் எடப்பாடியாருக்கே எங்கள் ஓட்டு” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அன்று, மாணவர்கள் மன உளைச்சலை கருத்தில் கொண்டு, தாயுள்ளத்தோடு தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்களின் நலனே பிரதானம் என்று வெளிப்படுத்திய முதல்வருக்கு, தமிழக மாணவர்கள் தங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படுத்திய நன்றி கலந்த பாசமாகவே இது பார்க்கப்பட்டுகிறது.

என்னை கிண்டல் அடிப்பதை நிறுத்துங்க.. காலேஜ் படித்த போது விஜய் மூஞ்ச பாருங்க – புகைப்படத்தோடு மீரா மிதுன் சர்ச்சை பதிவு

எங்களை வாழவைத்த தெய்வமே விடிய விடிய படிச்சு எழுதுனாலும் பெயிலாகும் எங்களை பாஸ் ஆக்கிய பார் போற்றும் பல்லவனே… அம்மா வழியில் எங்களின் அரியர்களை அழித்த அக்னி நட்சத்திரமே… தூங்கிக் கிடந்த எங்களை தூக்கிவிட்ட துருவநட்சத்திரமே கொங்கு நாட்டின் தங்கமே…. தமிழ்நாட்டின் இன்றைய முதல்வரே, நாளைய முதல்வரே,நிரந்தர முதல்வரே, அரியர்ஸ் எனும் பல்வால்தேவனை வதம் செய்த பாகுபலியே…எங்களின் அரியர்ஸ் அத்தனையும் கிளியரே,,அடுத்த முறையும் நீயே முதல்வரே.. தலைவா பரிச்சைக்கு வெச்ச நீ வேட்டு..அடுத்த தேர்தலில் 234 தொகுதியிலும் உனக்கே ஓட்டு… என்றும் நன்றியுடன்.. பாரதியார் கலை அறிவியல் கல்லூரி எழுமாத்தூர் மானவர்கள்… (Last bench rockers) நூறு சாமிகள் இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி போல் ஆகிடுமா எனவும் பாரதியார் கலைக்கல்லூரி மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், மாணவர்களின் மனதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார். கல்லூரி மாணவர்களின் நாயகனாக உருவெடுத்துள்ளார் எனலாம்.