நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

College Student Arrest on Sanam Shetty Complaint : தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் சனம் ஷெட்டி. சில படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர் மாடலிங் துறையை சார்ந்தவர். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவன் - அதிரடியாக கைது செய்த தமிழக போலீஸ்

தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் மர்ம நபர் ஒருவர் ஆபாச மெசேஜ் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். இதனால் அடையாறில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் சனம் செட்டி புகார் அளித்திருந்தார்.

அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில், மாற்றுத்தொழில் தொடங்க முடிவு..

இவரது புகாரை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் பயிலும் மாணவன் தான் அந்த மெசேஜ்களை அனுப்பியது என்று கண்டுபிடித்து அவரை கைது செய்துள்ளனர்.

Silambarasan-வுடன் மீண்டும் இணைந்த Yuvan Shankar Raja | ThappuPaniten | U1 Records | AK Priyan | HD

படிக்கிற பையன் இப்படி பண்ணி வாழ்க்கையைக் கீடுத்துக்கலாமா என சமூக வலைதளங்களில் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.