cognizant

புகழ்பெற்ற ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்டில் பல ஆயிரம் பேர் வேலை இழக்க உள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசண்ட் உலகம் முழுவதும் 166 இடங்களில் தொழிட்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனங்களில் இந்தியர்கள் உட்பட சுமார் 3 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடுமையான போட்டிகள் காரணமாக தனது செலவுகளை குறைக்கும் நடவடிக்கையில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது. அதன்படி முகநூலின் கண்டெண்ட் மாடரேசன் பிரிவில் பணிபுரியும் இந்தியர்கள் 8500 பேர் வேலை இழக்கவுள்ளனர். அதேபோல் 8 ஆயிரம் அமெரிக்கர்களும் வேலை இழக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.