coffee powder benefits
coffee powder benefits

காப்பி பொடியின் பயன்கள்!

☕ நறுமணமிக்க காபியை காலையில் குடித்தால், காலையில் ஏற்படும் சோர்வினைப் போக்கலாம். காபியின் நறுமணத்திற்கு, மனதை புத்துணர்ச்சி அடைய வைக்கும் சக்தி உள்ளது.

☕ காபியில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நமது செல்களை நச்சுகள், இரசாயனங்கள் போன்றவற்றினால் பாதிப்படைவதிலிருந்து தடுக்கிறது.

☕ காபி பொடியை ஒரு துணியில் கட்டி, குளியலறையில் தொங்கவிடுவதனால் குளியலறையில் வரும் துர்நாற்றமானது நீங்கிவிடும்.

☕ வீட்டில் எறும்புள்ள இடத்தில் காபி பொடியை தூவினால், எறும்புகள் வராமல் இருக்கும்.

☕ காபி பொடியை பயன்படுத்தி கழுவினால், பாத்திரத்தில் இருந்து வரும் முட்டை நாற்றத்தை போக்கலாம்.

☕ காபி தூளில் பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. தோட்டத்தில் சிறிது காபி பொடியைத் தூவினால், மண் சத்து நிறைந்ததாக இருக்கும்

☕ ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி குடிப்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்களினால் உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here