Cobra Release Date Details
Cobra Release Date Details

விக்ரம் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸாக கோப்ரா ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Cobra Release Date Detail : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக கோப்ரா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் இத்திரைப்படத்தினை தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் ஆகியவை இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. விக்ரம் கிட்டத்தட்ட 9 கெட்டப்புகளில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

விக்ரம் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. கோப்ரா ரிலீஸ் எப்போது தெரியுமா?? - வெளியான மாஸ் தகவல்.!!

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது ரம்ஜான் விருந்தாக இத்திரைப்படம் வரும் மே 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

இந்த திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள கோப்ரா திரைப்படம் விக்ரம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.