விக்ரம் நடிப்பில் எட்டு கெட்டப்புகளில் வெளியான கோப்ரா திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் கோப்ரா.

மிரள வைக்கும் முதல் பாதி ஆனால் இதெல்லாம் மைனஸ் - கோப்ரா படத்தின் முழு விமர்சனம்

படத்தின் கதைக்களம் :

ஸ்காட்லாந்தில் ஒரு இளவரசன் கொல்லப்படுகிறார். அதன் பிறகு இந்தியாவிலும் இது போன்ற ஒரு அரசியல்வாதி கொல்லப்படுகிறார். இப்படி முக்கிய தலைவர்கள் கொல்லப்படும் போது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சாதாரண கணக்கு வாத்தியாராக இருக்கும் விக்ரம் தொடர்ந்து சில கொலைகளை செய்கிறார். இதற்கான காரணம் என்ன ஏன் இப்படி கொலைகளை செய்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தைப் பற்றிய அலசல் :

பொதுவாகவே விக்ரம் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த பாத்திரமாகவே மாறி நடிப்பை வெளிப்படுத்துவதில் மிகவும் வல்லவர். அந்த வகையில் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நம்மை மிரள வைக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக இர்பான் பதான் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். அதேபோல் வில்லனாக ரோஷன் மேத்யூவ் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். ஸ்ரீநிதி செட்டி துரத்தி துரத்தி விக்ரமை காதலிக்கிறார்.

மிரள வைக்கும் முதல் பாதி ஆனால் இதெல்லாம் மைனஸ் - கோப்ரா படத்தின் முழு விமர்சனம்

இயக்குனர் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து திறம்பட இயக்கியுள்ளார். ஆனால் முதல் பாகத்தில் இருந்த எதிர்பார்ப்பு போன்றவை இரண்டாம் பாகத்தில் சற்று குறைவாகவே உள்ளது. மூன்று மணி நேரத்திற்கும் மேலான ரன்னிங் டைப் நம்மை சில இடங்களில் சலிக்க வைக்கிறது. சில லாஜிக்கல் தவறுகள் உள்ளன.

இது எப்படி இருந்தாலும் விக்ரம் நடிப்பால் இவை அனைத்தும் தவிடு பொடியாகின்றன.