Cobra Movie Gallery
Cobra Movie Gallery

சியான் விக்ரம் மாஸான லுக்கில் இருக்கும் கோப்ரா பட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Cobra Movie Gallery : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் துருவ நட்சத்திரம், கோப்ரா ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

கோப்ரா திரைப்படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் பாடலாக தும்பி துள்ளல் என்ற என்ற பெயரில் புதிய பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க… இவங்களுக்கு உதவுவதே மகா குத்தம் – ராகவா லாரன்ஸ் பரபரப்பு பதிவு!

இந்த நிலையில் இப்பாடலில் சியான் விக்ரமின் கெட்டப் புகைப்படங்களை இயக்குனர் அஜய் ஞானமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் அனைவரும் பாடலுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக கூறி வருகின்றனர்.