CM Statement About Corona in India
CM Statement About Corona in India

தமிழகத்தில் கொரானோ நிலவரம் எப்படி இருக்கு என தொலைபேசி வாயிலாக பிரதமருக்கு தமிழக அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

CM Statement About Corona in India : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் இந்தியாவும் அதிகமான பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களிடம் தொலைபேசி வாயிலாக மாநிலத்தின் நிலை குறித்து கேட்டறிந்து வருகிறார்.

அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தமிழகத்தின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

வலிமையில் இணைந்த பிரபல நடிகரின் மகன்.. யார் தெரியுமா? அதுவும் இப்படியொரு வேடத்தில் நடிக்கிறாராம்.!

அப்போது முதலமைச்சர் பழனிசாமி இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் ஒரு நாளைக்கு சுமார் 48 ஆயிரம் பேருக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்ப அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரானாவால் இதுவரை 1,70,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,481 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,17,915 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.