வீடு இல்லாத ஆதிதிராவிடர் அருந்ததியர் மக்களுக்கு அரசே வீடு கட்டித் தரும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

CM EPS Speech in Tirupur : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடர்ந்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை மகிழ்ச்சியாக்கி வருகிறார்.

ஏற்கனவே விவசாய கடன் தள்ளுபடி, 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் என அறிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது கிராமம் முதல் நகரம் வரை வாழும் வீடு இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியினர் மக்களுக்கு வீட்டு மனையை அரசே வாங்கி அவர்களுக்கு கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பூரில் பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார்.

முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.