முதல்வர் பழனிச்சாமி

தூத்துக்குடி மாவட்டத்தில் வாழ்வாதாரத்திற்காக வேலைவாய்ப்பு கேட்டு கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இரண்டு மணி நேரத்தில் பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி.

முதல்வர் பழனிச்சாமி : தூத்துக்குடி ஆய்வுக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக வழி செய்யுமாறு கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதனை உதாசீனப்படுத்தாமல் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் அவருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணிநியமன ஆணையை உடனடியாக வழங்கியிருக்கிறார்.

தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதல்வர், வாகனத்தை நிறுத்தி மாற்றுத்திறனாளி பெண் கொடுத்த மனுவை, உடனே மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி, 2 மணி நேரத்தில் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலையை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழக முதல்வரின் இந்த செயல் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.