YouTube video

CM EPS Reply to Stalin : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த கொரானா வைரஸ் பேரிடர் காலத்திலும் தமிழக அரசு தரமான நடவடிக்கைகள் மூலமாக மக்களின் நலனைப் பேணிப் பாதுகாத்து வருகிறது.

இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் முதலீடுகள் அதிகரித்து வேலைவாய்ப்பின்மை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் குவியும் முதலீடுகள்.. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வரின் பதிலடி

இருப்பினும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆரம்பத்தில் முதலீடே வரவில்லை என கூறினார். அதன் பின்னர் வழக்கமாக வரும் முதலீடுதான் என்றார். அந்த பின்னர் 25 சதவீதம் வந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கேள்வி எழுப்பிய போது எவ்வளவு நாளைக்குத்தான் ஸ்டாலின் ஒன்றும் அறியாதவர் போல சொல்லிக் கொண்டிருக்க முடியும்.

எல்லாம் மக்கள் மன்றத்தில் தெளிவாக உள்ளன. ஸ்டாலின் இதுபோன்று குற்றச்சாட்டுகளை வைப்பதால் நாங்கள் எங்களுடைய சாதனைகளை கூற அவர் வழிவகை செய்து கொடுக்கிறார் என பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் எப்படி சொந்த ஊர்களுக்குத் திரும்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதோ அதேபோல் அவர்கள் தமிழகம் திரும்பவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குவதற்காக ஸ்ரீபெரும்புதூரில் வல்லம் வடகால் தொழில் பூங்காவில் 7,000 பேர் தங்குவதற்கு ரூபாய் 377 கோடி செலவில் 9.50 ஏக்கர் நிலப்பரப்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டமாக 32 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 700 கோடி செலவில் 20 ஆயிரம் பேர் தங்குவதற்கான குடியிருப்பு கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியதும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.