ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த பதிலடி | Edappadi Palaniswami

CM EPS Reply to M.K.Stalin : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த கொரானா வைரஸ் பேரிடர் காலத்தில் தமிழக மக்களுக்கு இப்போது என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்து செயலாற்றி வருகிறது.

பொருளாதாரப் பேரிழப்பு ஏற்பட்டிருக்கும் இந்த நிலையிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்நிய முதலீடுகளை ஈர்த்து தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரித்து வருகிறார். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நல்ல திட்டங்களை பார்த்து இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் வியந்து வருகின்றன.

ஆனால் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக நாளுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டு ஆளும்கட்சி குறித்து குற்றம்சாட்டி வருகிறது.

ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி

அந்த வகையில் சட்டமன்றக் கூட்டத்தொடர்களுக்கு மூன்று நாட்கள் பத்தாது என முதலில் குற்றம் சாட்டியது.

இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்து விட்டு திமுக கூட்டத்தொடர் நடந்த மூன்று நாட்களுக்குள் இரண்டு முறை வெளிநடப்பு செய்துள்ளது என்பது வேடிக்கையாக இருக்கிறது.

இதனால் நெட்டிசன்கள் திமுக என்பது திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல வெளிநடப்பு முன்னேற்ற கழகம் என கிண்டலடித்து வருகின்றனர்.

ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோதுகூட மு க ஸ்டாலின் தன்னுடைய சட்டைகளை கிழித்து எறிந்து கொண்டே சட்ட சபையை விட்டு வெளியேறியதையெல்லாம் மீண்டும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

CM EPS Reply to Stalin
CM EPS Reply to Stalin

நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக மனு அளித்து விட்டு அதற்கு முதல்வர் ஆதாரங்களோடு பதிலடி கொடுத்ததும் திமுக குற்றம் கூற முடியாமல் கூட்டத்தொடரில் திணறியது, பின்னர் அடுத்ததாக என்ன பேசுவது என்று தெரியாமல் கூட்டத்தொடரை விட்டு வெளிநடப்பு செய்தது. இவை அனைத்தும் அதிமுக அரசின் கொரோனா காலப்பணிகளின் நேர்மையையே பறைசாட்டுகிறது என சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.