தமிழகத்தில் காணாமல் போன காலரா உயிரிழப்பு.. முதல்வர் பழனிசாமி அரசு எடுத்த நடவடிக்கைகள்.!! | TN Govt

தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து சிறப்பாக திட்டங்களை செயல்படுத்துகிறது.

அந்த வகையில் கழிவு நீர் மேலாண்மை திட்டத்தினால் காலரா நோய்க்கு எதிரான பாதுகாப்பை உறுதி செய்யுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில், கடந்த 2011ம் ஆண்டிலிருந்து காலராவால் ஒருவர் கூட இறக்கவில்லை.

காலரா நோய்ப்பரவல் குறித்தான, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காணாமல் போன காலரா உயிரிழப்பு.. முதல்வர் பழனிசாமி அரசு எடுத்த நடவடிக்கைகள்.!!

சிறப்பான கழிவுநீர் பராமரிப்பு, பாதாளச்சாக்கடைத் திட்டங்களில் தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளால் காலரா மரணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, 2012 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை, 8 வருடங்களில் மொத்தம் வெறும் 710 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். இது ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக வெறும் 89 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதை காட்டுகிறது.

திமுக ஆட்சி காலமான 2007 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3544 ஆக இருந்தது. சராசரியாக ஆண்டுக்கு 709 பேர் காலராவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.