CM Edappadi Palanisamy
CM Edappadi Palanisamy

CM Edappadi Palanisamy – சேலம்: பாமகவுடன் நாங்கள் மட்டுமா கூட்டணி வைத்திருந்தோம்… கடந்த காலங்களில் திமுகவும் தான் கூட்டணி வைத்திருந்தது.

இதனால் கூட்டணி வேறு, கொள்கை வேறு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறியிருக்கிறார்.

சேலம் நேரு கலையரங்கில் நடைபெற்ற விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் 35 திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து 34 புதிய கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் பல்வேறு துறைகளின் சார்பில், 43,274 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் விழா மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தமிழக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் உரிய முறையில் நன்றியை தெரிவிப்பார்கள்.

மேலும் தமிழகத்திலேயே முதன் முறையாக சேலத்தில் தான் இரண்டடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு. தேமுதிக உட்பட பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று கூறிய அவர், பாமகவுடன் நாங்கள் மட்டுமா கூட்டணி வைத்திருக்கிறோம்? என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த காலங்களில் திமுகவே அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளது. மேலும் தேர்தல் நேரங்களில் கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில்தான் கூட்டணி அமைக்கப்படுகிறதே தவிர, அதற்கும் கொள்கைக்கும், எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்

இருப்பினும் பாமகவுடன் கூட்டணி வைத்துள்ளது நெருடலாக இல்லையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த முதல்வர், “சும்மா குதர்க்கமாகவே கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்லி லேசாக டென்ஷனாக பேசி.. ” பின்னர் சிரித்துக் கொண்டே மழுப்பினார்..

பின்னர் தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அது குறித்து இன்னும் சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here