CM Edappadi K Palaniswami started Anti plastics campaign
CM Edappadi K Palaniswami started Anti plastics campaign

CM Edappadi K Palaniswami started Anti plastics campaign – சென்னை: பிளாஸ்டிக் மாசுபாடு இல்லாத தமிழ்நாடு உருவாக வேண்டும் என நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்துள்ளார்.

‘சென்னையில் பிளாஸ்டிக் மாசுபாடு இல்லாத தமிழ்நாடு உருவாக்க வேண்டும் என நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடி அசைத்து விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தொடங்கிவைத்துள்ளார்’.

இந்நிலையில், ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் சுற்றுசூழல் தினத்தன்று ஒரு முறை பயன்படுத்திய பிளாஸ்டிக்கை முழுவதுமாக தடைசெய்ய முதலமைச்சர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, விற்க, தயாரிக்க தமிழக அரசு தடை விதிக்க, உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து இந்த உத்தரவின் அடிப்படையில் , பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் விளம்பர தூதர்களாக நடிகர் சூர்யா, ஜோதிகா, விவேக் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் பிளாஸ்டிக் தடை குறித்த அறிவிப்பை அமல் படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் தமிழகம் முழுவதும் மண்டல ரீதியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரிகளில் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள், சுற்றுசூழல் பாதிப்புகள் போன்றவற்றை மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அந்த வாகனம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரையில் முற்றிலுமாக பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.