CM Discuss to Ministers
CM Discuss to Ministers

CM Discuss to Ministers – சென்னை: கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில், அமைச்சர் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் கூட்டணியை அதிமுக நேற்று உறுதி செய்தது.

இந்நிலையில் அமைச்சர் தங்கமணி மற்றும் வேலுமணி, இந்த இரு அமைச்சர்களும் தான் பிற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடிய குழுவில் முக்கியமானவர்கள்.

மேலும் பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் கூட்டணியை உறுதி செய்ததில், இந்த 2 அமைச்சர்களின் பங்கு தான் முக்கியமானது.

இந்நிலையில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க, அதிக தொகுதிகளை கேட்டும், தமிழ் மாநில காங்கிரஸ் மயிலாடுதுறை தொகுதி தங்களுக்கு வேண்டும் என்றும் கேட்டு வருகிறது.

இது தொடர்பாகத்தான் முதல்வருடன் இறுதிகட்ட ஆலோசனையில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்றே தேமுதிகவுடனான கூட்டணி தொடர்பாக இறுதி முடிவை அதிமுக முடிவு எடுக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் சில தகவல் தெரிவிக்கின்றன.

எனவே இன்று தேமுதிக மற்றும் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற நமது கேள்விக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும்.