CM Clarification on EB Bill Issue
CM Clarification on EB Bill Issue

மின்கட்டண பிரச்சனை குறித்து சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

CM Clarification on EB Bill Issue : தமிழகத்தின் கொரானா வைரஸ் பரவல் காரணமாகவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால் பல தொழில்கள் நடைபெற்றிருந்தன. முற்றிலுமாக லாக் டவுன் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக நான்கு மாதங்களாக மின்சாரத்தறை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று மின் பயனீட்டு அளவு பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருந்தது.

இதனால் 4 மாதங்களுக்கான தொகையை சேர்த்து செலுத்தலாம் என கூறியுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவிலும் இதே தான் குறிப்பிடப்பட்டு இருந்தது எனக் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகளில் போராடும் முன்கள பணியாளர்களுக்கு இறப்பு நேர்ந்தால் அவர்களது குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிவாரண நிதியாக அளிக்கப்படும் என கூறியுள்ளார்.

வைல் கார்டு என்ட்ரியில் செல்ல இருந்த நடிகை எடுத்த திடீர் முடிவு – வைரலாகும் ட்வீட்.!

அதேபோல் செவிலியர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிவாரண நிதியாக அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே காஷ்மீரில் நடந்த தாக்குதலின் போது உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் மதியழகன் என்பவரின் மனைவி தமிழரசிக்கு எடப்பாடியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட் பணியமர்த்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விவசாயிகளுடன் கலந்து பேசிய பின்னரே பாரத் பெட்ரோலியம் பழுப்புகள் புதைக்கும் பணி தொடங்கப்படும். யாருடைய விவசாய நிலத்தில் பழுப்பு செல்கிறதோ அவர்களுக்கு 100 சதவீத இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே கைத்தறி மற்றும் நெசவுத் தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரத்தை தமிழக அரசு மட்டுமே வழங்குவதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.