CM Candidate: Edappadi K. Palaniswami vs O. Panneerselvam – People Result

YouTube video

People Opinion About AIADMK CM Candidate : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பதவி ஏற்றதும் எதிர்க்கட்சிகள் மற்றும் பலர் ஓரிரு மாதங்களில் ஆட்சி கலைந்து விடும் என பேசினார்கள்.

ஆனால் பேசிய அனைவரும் வாயடைத்துப் போகும் அளவிற்கு இன்றைய தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை அழித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். மக்களுக்கு தொடர்ந்து நல்ல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வருவது போலவே கட்சியிடம் எடப்பாடி பழனிச்சாமியின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.

இதனால் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் இருக்க வேண்டும் என அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் பெரும்பாலான தொண்டர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

இதற்கு முன்னதாக ஓபிஎஸ் தரப்பில் இருந்தவர்களும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். அடுத்த முதல்வர் வேட்பாளர் யாராக இருக்கும் என்ற விவாதம் சமூக வலைதளங்களிலும் நாளுக்கு நாள் வலுத்து கொண்டே வருகிறது.

இப்படியான நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தீவிர தொண்டன் ஒருவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என கையில் ஒரு பதாகையுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

அதேபோல் பிரபல இணையதள பத்திரிகை அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யாராக இருக்கும் என்ற கேள்விக்கு பெரும்பாலான மக்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தான் குறிப்பிட்டுள்ளனர். ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலான ஓட்டுக்களை கிடைத்துள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.