Climax of 96 Movie

96 வெற்றி பெற இதுதான் காரணம் என க்ளைமாக்ஸ் குறித்து வர்ஷா பொல்லம்மா பேசியுள்ளார்.

Climax of 96 Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி இவரது நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 96. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.

யாரும் எதிர்பார்க்காத கிளைமேக்ஸ் காட்சி காரணமாக இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இன்று வரை பலரும் கொண்டாடப்படும் படமாக இருந்து வருகிறது.

இதே படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதியிடம் பாடம் பயிலும் மாணவியாக வர்ஷா பொல்லம்மா வருவார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் விஜய் சேதுபதியை திருமணம் செய்து கொள்வீர்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை ஏன் என ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து வர்ஷா பொல்லம்மா இந்தக் கேள்வியை பல பேர் என்னிடம் கேட்டு விட்டார்கள் ஆனால் 96 திரைப்படம் வெற்றிபெற அந்த கதை முடிந்த விதம் தான் காரணம் என கூறியுள்ளார்.