சிம்பு மற்றும் கௌதம் மேனன் இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கான காரணம் என்ன என்பது பற்றி தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து சிம்பு தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளரான ஐசரி கணேஷ் அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு தங்களுக்கு மூன்று படங்களில் நடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்திருந்தார்.
ஆனால் தற்போது எங்களுக்கு படம் பண்ணாமல் வேறொரு தயாரிப்பாளருக்கு படம் பண்ணுகிறார் ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் சிம்பு வேறொரு தயாரிப்பாளர் பக்கம் சென்றதற்கு காரணம் உடனே மோதல் தான் என பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சூட்டிங் ஸ்பாட்டில் கௌதம் மேனன் சிம்புவுக்கு மரியாதை கொடுக்கவில்லை. அதனால் சிம்பு மீண்டும் அவருடன் படம் பண்ண தயங்குகிறார் என தெரிவித்துள்ளார்.