உற்சாகத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு சுரேஷ் சந்திரா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்த ஷாலினி திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை அடியோடு நிறுத்திக் கொண்டார்.

உற்சாகத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு சுரேஷ் சந்திரா கொடுத்த ஷாக் - என்ன இப்படி சொல்லிவிட்டாரே.!!

இந்த நிலையில் கிட்டத்தட்ட 21 வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள அவருடைய கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஷாலினி ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இணையத்தில் காட்டுத் தீயாக பரவின.

இப்படியொரு நிலையில் இதுகுறித்து அஜித்தை மேலாளர் சுரேஷ் சந்திரா பொண்ணியின் செல்வன் படத்தில் ஷாலினி நடிக்க இருப்பதாக வெளியான தகவலில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை எனக்கூறி உற்சாகத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

உற்சாகத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு சுரேஷ் சந்திரா கொடுத்த ஷாக் - என்ன இப்படி சொல்லிவிட்டாரே.!!

இதனைக் கேட்ட அஜித் ரசிகர்கள் அப்போ பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினி இல்லையா என அதிர்ச்சியோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.