Cinema Ticket Booking Method Changes | Tamil Cinema News | Minister Kadambur Raju | Kollywood Cinema News | Trending Cinema News
ஆன்லைன் சினிமா டிக்கெட் விற்பனையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Cinema Ticket Booking Method : உலகம் என்ன தான் வேகமாக சென்றாலும் மக்களுக்கு படங்களை தியேட்டர்களில் பார்ப்பது மீதான மோகம் குறைந்தபாடில்லை. இனியும் குறைய போவதும் இல்லை.

அதே சமயம் சினிமா டிக்கெட் விற்பனைகளில் பல வித தொழில்நுட்ப திட்டங்கள் வந்து விட்டன.

ஆரம்பத்தில் வரிசையில் இன்று டிக்கெட் வாங்கிய காலங்கள் மாறி இன்று வீட்டில் இருந்து ஆன்லைனில் நமக்கான டிக்கெட்களை புக் செய்து கொள்ளலாம்.

இது ஈஸியான முறை தான் என்றாலும் இதிலும் சில நெருடல்கள் இருந்து தான் வருகின்றன, அதாவது வரி, ஆன்லைன் கட்டணம் என சேர்த்து டிக்கெட்டின் விலை கூடுதலாகவே இருக்கும்.

இந்த முறைகளில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அதாவது வரும் காலங்களில் ஆன்லைனில் எத்தனை டிக்கெட்கள் பதிவு செய்தாலும் ஒரே ஒரு டிக்கெட்டிற்கான சேவை கட்டணம், வரி ஆகியவை விதிக்கப்படும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இது நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.