2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளனர் திரையுலக பிரபலங்கள்.

Cinema Celebrities Election Results 2021 : தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மற்றும் கலைஞர் மு கருணாநிதி ஆகியோரின் மறைவுக்குப் பிறகு நடந்த முதல் தேர்தல் என்பதால் வெற்றி பெறப்போவது யார் என்று எதிர்பார்ப்பது மக்கள் மத்தியில் மிகுந்த அளவில் இருந்து வந்தது.

திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. கூட்டங்கள் கட்சிகளோடு சேர்ந்து 159 தொகுதிகளில் வெற்றி அடைந்துள்ளது. அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எழுபத்தைந்து இடங்களில் வெற்றி பெற்று உள்ளன.

ஜெயலலிதா கலைஞர் என இருவரும் இல்லாததால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாகக் கூறி அதனை நிரப்ப போவதாக கமல் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் இடைத் தேர்தலில் போட்டியிட்டனர்.

2021 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த சினிமா பிரபலங்கள் - யார் யார் எவ்வளவு ஓட்டுக்கள், இதோ விவரம்.!!

அப்படி 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான நட்சத்திர போட்டியாளர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசனிடம் 1500 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். காலையிலிருந்தே முன்னிலையில் இருந்து வந்த இவர் இறுதியில் தோல்வியை சந்தித்தார்.

விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மயில்சாமி வெறும் 60 ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளார். இந்த தொகுதியில் நோட்டா கூட 200க்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு 19 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று இருந்தாலும் திமுக வேட்பாளர் எழிலனிடம் தோல்வியைத் தழுவினார்.

அதேபோல் தனிக்கட்சி தொடங்கி தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மன்சூர் அலிகான் 276 ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு இருந்த இவர் கமலுக்கு விட்டு தருவதாக கூறி தொண்டாமுத்தூர் தொகுதிக்கு மாற்றினார்.

பாடலாசிரியர் கவிஞர் சினேகன் நடிகர் மயில்சாமி போட்டியிட்ட விருகம்பாக்கம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக போட்டியிட்டார். ஆனால் இவருக்கும் பெரிய அளவில் ஓட்டுகள் கிடைக்காமல் தோல்வியைத் தழுவினார்.

அதேபோல் மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஸ்ரீபிரியா அவர்களும் தோல்வியை தழுவினார். திரையுலகிலிருந்து அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின் மட்டுமே இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.