
தளபதி விஜயை தொடர்ந்து அஜித் உடன் இணைந்து நடிக்கிறார் பிக் பாஸ் பிரபலம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் சிபி சந்திரன்.

இவர் தமிழ் சினிமாவில் தளபதி விஜய் உடன் இணைந்து சர்க்கார் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னால் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தளபதி விஜயுடன் இணைந்து நடித்ததை தொடர்ந்து தற்போது சிபி அஜித்துடன் இணைந்து வலிமை படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே அவர் அஜித் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் சில புகைப்படங்களை வெளியிட அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.