விஜயுடன் சேர்ந்து நடித்துள்ளார் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி.

Cibi Chakravarthy With Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் டான்.

சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, மனோபாலா, சிவாங்கி, மிர்ச்சி விஜய், பாலசரவணன் என எக்கச் சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை அட்லியின் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபிச்சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் சிபிச்சக்கரவர்த்தி விஜயுடன் இணைந்து நடித்துள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. மெர்சல் படத்தில் விஜய்யை பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுப்பார்கள். அந்த பத்திரிகையாளர்களில் ஒருவராக சிபிச்சக்கரவர்த்தி நடித்துள்ளார்.

இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.