christmas cake
christmas cake

christmas cake :

கேக் பேக் செய்யும் ஓவனின் சூடு மிகத் துல்லியமாக இருக்கவேண்டு‌ம். கேக் பேக் செய்வதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பே ஓவனை சூடாக்கி விட வேண்டும்.

கேக் பேக் செய்யும் டி‌ன்னில் இரண்டுக்கு பிரவுன் பேப்பரை அளவுக்கு தக்கபடி வெட்டி எடுத்த வெண்ணெய் பூசி வைக்க வேண்டும். டின்னின் முக்கால் பகுதி அளவுக்கே கேக் கலவையை ஊற்ற வேண்டும்.

கேக் பேக் செய்யப்படும்போது ஓவனைத் திறந்து மூடக்கூடாது,திறந்து மூடினால் கேக்கின் மேன்மைத் தன்மை பாதிக்கப்படும்.

பேப் செய்யப்பட்ட கேக் நன்றாக ஆரிய பின்பு பேப்பரோடு சேர்த்து கேக்கை வெளியே எடுக்க வேண்டும். அதனை அலுமினிய பாயிலில் பொதிந்து பாதுகாக்க வேண்டும். கேக்கை மூன்று வாரங்கள் வரை வைத்திருந்து சாப்பிட்டால் அதிக டெஸ்ட் இருக்கும்.

கேக்கில் சேர்க்கப்படும் மைதா, பேக்கிங் பவுடர்,சோடா உப்பு போன்றவைகளை மூன்று முறை சளித்தெடுக்க வேண்டும்.

கேக் தயாரிக்க சேர்க்கும் அனைத்து பொருட்களின் அளவும் துல்லியமாக இருக்க வேண்டும்.

கேக்கில் சேர்க்கும் வெண்ணைய்யில் உப்பு சேர்க்க கூடாது.

புருட் கேக் தயாரிக்கும்போது பழங்களின் விதைகளை நீக்கிவிட்டு சிறித நறுக்க வேண்டும். பெரிதாக நறுக்கிவிட்டால் கேக் எளிதாக உடைந்து போகும்.

கேக் மீது முந்திரி பருப்பு வைத்தால் பெரும்பாலும் பெயர்ந்து விழுந்துவிடும். அவ்வாறு விழாமல் இருக்க முந்திரி பருப்பை பாலில் முக்கி கேக், பிஸ்கெட் மீது வையுங்கள்.

கேக் அதிக மென்மையாக இருக்க வேண்டுமானால் அதில் சிறிதளவு தேன் சேர்க்களாம்.

கேக் தயாரிக்க முட்டையை அடித்து நுறைக்க வைக்கும் போது ஒரு தேக்கரண்டி மைதாவும் சேருங்கல்.இதனை சேர்த்தால் கேக் கலவை செம்மையாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here