Chris Gayle Speech : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News, Gayle Speech

Chris Gayle Speech :

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி தொடக்க பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வரும் 2019 உலகக்கோப்பை தொடரோடு ஓய்வு பெற வாய்ப்புள்ளது என்று தெரிவி்த்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அவரது முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளார். உலகக்கோப்பை தொடர் உடன் என்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வராது என்று கூறியுள்ளார்.

கெயில் கூறியது :

“என்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடிவிற்கு வரவில்லை. நான் இன்னும் சில போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது.

இன்னும் ஒரு தொடரில் விளையாட வாய்ப்புள்ளது. யாருக்கு தெரியும் என்ன நடக்க இருக்கிறது என்பதை நாம் பார்ப்போம்.

இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள். காரணம் தெரியுமா உங்களுக்கு?

உலகக்கோப்பை தொடருக்குப்பின் என்னுடைய திட்டம் என்ன என்று கேட்கிறீர்கள் எனில் என்னுடைய பதில் இதுதான் “இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஒருவேளை விளையாடலாம், அப்புறம் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கட்டாயம் விளையாடுவேன்” .

அதே சமயம் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடமாட்டேன். உலகக்கோப்பை தொடருக்குப்பின் என்னுடயை திட்டம் இதுதான்’’ என்று தெரிவித்தார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.