chola dosai benefits
chola dosai benefits

தேவையானப் பொருட்கள் :

சோளம் – 1 கப்,
இட்லி அரிசி – 1 கப்,
உளுத்தம்பருப்பு – 1/2 கப்,
வெந்தயம் – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

1) சோளத்தை தனியாக ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.

2) இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து ஆறு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக்கொள்ளவும்.

3) பிறகு, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து உளுத்தம்பருப்பு மாவோடு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து புளிக்க வைத்துக் கொள்ளவும்.

4) பின்பு, தோசை மாவுப் பதத்திற்கு மாவை கரைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி, எடுத்துப் பரிமாறவும்.

5) சுவையான சோள தோசை தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here