Chiyangal Movie Review
Chiyangal Movie Review

வைகறை பாலன் இயக்கத்தில் கரிகாலன் நடிக்கும் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சியான்கள். இந்தப் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Chiyangal Movie Review : சியான்கள் என்றால் வயதானவர்கள் என்று பொருள். வயதானவர்கள் என்று சொல்வதைக் காட்டிலும் வயதாகியும் மைனர் போல ஊரையையே கலக்கும் குசும்புக்கார தாத்தாக்கள் எனக் கூறலாம்.

இவர்களை மையமாகக் கொண்டு 70 புதுமுகங்களைக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் இந்த சியான்கள்.

படத்தின் கதைக்களம் :

வயதான ஐந்து சியான்களும் அவர்களின் ஆசையையும் மையமாக கொண்டது தான் இந்த படத்தின் கதை. வயதானாலும் ஆசைகள், குறும்புத்தனங்கள், ரொமான்ஸ் போன்றவைகள் இருக்கும். அவற்றைப் பற்றி பேசுவது தான் இந்த படத்தின் கதை. ( சுவாரசியம் கருதி கதையை மேலும் விவரிக்கவில்லை )

படத்தை பற்றிய அலசல் :

படத்தில் நடித்துள்ள 5 சியான்களும் திறமையான நடிப்பை எதார்த்தமாக கொடுத்து உள்ளனர்.

படத்தின் தயாரிப்பாளரான கரிகாலன் இந்த படத்தின் நாயகனாகவும் கச்சிதமாக தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தின் நாயகி ரிஷா புதுமுக நடிகை என்றாலும் அப்படியே பக்கா கிராமத்து பெண்ணாக இந்த கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்துள்ளார்.

மேலும் படத்தில் நடித்துள்ள நளினிகாந்த் உள்ளிட்டோரும் கதாபாத்திரங்களை திறம்பட நடித்து கொடுத்துள்ளார். நஜினிகாந்தின் கதாபாத்திரம் ஒவ்வொருவரையும் கண்கலங்க வைப்பது உறுதி.

70 புதுமுகங்கள் இணைந்து நடித்துள்ள சியான்கள் படம் எப்படி இருக்கு?? - திரை விமர்சனம்.!!

தொழில்நுட்பம் :

இசை :

முத்தமிழ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அவருடைய இசையில் பாடல்கள் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன.

ஒளிப்பதிவு :

பாபு குமார் I.E என்பவர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். காட்சிகள் ஒவ்வொன்றும் தன்னுடைய ஒளிப்பதிவால் உயிர் கொடுத்துள்ளார்.

எடிட்டிங் :

மப்பு ஜோதி பிரகாஷ் படத்திற்கு என்ன தேவையோ அதை சரியாக தேர்ந்தெடுத்து ஒரு சிறந்த கோர்வையாக படத்தை எடிட்டிங் செய்து கொடுத்துள்ளார்.

இயக்கம் :

புதுமுக இயக்குனரான வைகறை பாலன் திரைப்படம் சார்ந்த அனைத்தையும் அறிந்த இயக்குனரை போல இந்த படத்தை முழுக்க முழுக்க சுவாரசியமாகவும் ரசிக்கும் வகையில் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

  1. படத்தின் கதைக்களம்
  2. நடிகர் நடிகைகளின் நடிப்பு
  3. முற்றிலும் மாறுபட்ட சிந்தனை
  4. இசை மற்றும் ஒளிப்பதிவு

தம்ப்ஸ் டவுன் :

வழக்கமான சிறு சிறு லாஜிக்கல் தவறுகள்.