
நடிகர் விக்ரமின் சியான் 61 திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கம் இருக்கும் ‘சியான் 61’ என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது அதில் நடிகர் விக்ரம், பா.ரஞ்சித், இயக்குனர் ஞானவேல் ராஜா ஜி.வி.பிரகாஷ் குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது சியான் 61 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடப்பாவில் வரும் 18ம் தேதி தொடங்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து 15 நாட்கள் ஆந்திராவிலும், அதன்பின் மதுரையிலும் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெளியான இந்த தகவலால் விக்ரமின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.