இன்று மாலை விக்ரம் ரசிகர்களுக்கு சூப்பர் டூப்பர் அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Chiyaan Vikram61 Announcement Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன், மகான், கோப்ரா உள்ளிட்ட திரை படங்கள் வெளியாக உள்ளன.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மகான் திரைப்படத்தில் தன்னுடைய மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார். ரசிகர்கள் அனைவரும் இந்த படங்களில் அப்டேட் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் விக்ரமின் புதிய படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

அதாவது இன்று மாலை விக்ரம் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள சியான் 61 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக சியான் விக்ரம் அவர்களின் மக்கள் தொடர்பாளர் யுவராஜ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் விக்ரம் ரசிகர்களே ரெடியா என கேள்வி எழுப்பி ஒரு ட்விட்டர் பதிவை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதோஷ கால சிவ வழிபாடு : கிடைக்கும் பலன்கள்..

இதனால் விக்ரம் ரசிகர்களுக்கு இன்று மாலை சூப்பர் டூப்பர் கொண்டாட்டம் காத்துக் கொண்டிருப்பது உறுதி. என்ன கொண்டாட்டத்திற்கு ரெடியா ரசிகர்களே?

நான் இந்த படத்துல ஒன்னுமே பண்ணல – Actor Prankster Rahul Speech | Bachelor Press Meet