Chiyaan Vikram Meet With P Suseela

பிரபல பாடகி பி சுசிலாவை நேரில் சந்தித்து உள்ளார் பிரபல தமிழ் நடிகரான சியான் விக்ரம்.

Chiyaan Vikram Meet With P Suseela : இந்திய திரையுலகில் பிரபல பாடகிகளில் ஒருவராக வலம் வருபவர் பி சுசீலா. இவரது மெல்லிய குரலுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என கூறலாம். பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இவரது குரலில் வெளியான பல பாடல்கள் தற்போது வரை ரசிகர்களால் பெருமளவு ரசிக்கப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இவரை பிரபல தமிழ் நடிகரான சியான் விக்ரம் சமீபத்தில் சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

படைக்கு சுசீலாவின் வீட்டிற்கு ஒருநாள் சியான் விக்ரம் அவர்களின் மேனேஜரிடம் இருந்து போன் வந்ததாக சொல்லப்படுகிறது. அவர்கள் சியான் விக்ரம் சுசீலா அம்மாவின் தீவிர ரசிகர். அவரை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறார் என கூறியுள்ளனர். பிறகு பி சுசிலா அவர்கள் சம்மதம் தெரிவித்ததால் நடிகர் சியான் விக்ரம் அவரை நேரில் வீட்டில் சென்று சந்தித்து பேசியுள்ளார் என தெரியவந்துள்ளது.

இது குறித்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி லைக்குகளை குவித்து வருகிறது.