Chiyaan 60 Villain Update
Chiyaan 60 Villain Update

சியான் 60 படத்தின் வில்லன் யார் என்பது குறித்து தகவல் ஒன்று தெரிய வந்துள்ளது.

Chiyaan 60 Villain Update : தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் தற்போது டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து சியான் விக்ரம் தன்னுடைய மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து சியான் 60 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

நீங்க எதுக்குள்ளவும் வர மாட்டீங்க ரெஸ்ட் எடுங்க.. – பிரபல நடிகரை கலாய்த்த குஷ்பு!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இப்படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பது விக்ரம் தான் என கூறப்படுகிறது. இதனால் விக்ரம் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா? அல்லது துருவ் ஹீரோவாக நடிக்க விக்ரம் வில்லனாக நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எது எப்படி இருந்தாலும் விக்ரம் மையம் அவரது மகன் துருவ்வையும் ஒரே படத்தில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.