Chiyaan 60 Title Update
Chiyaan 60 Title Update

சியான் 60 படத்தின் டைட்டில் குறித்த தகவலுக்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

Chiyaan 60 Title Update : தமிழ் சினிமாவில் திறமையான நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். சாதாரண டப்பிங் ஆர்டிஸ்டாக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று முன்னணி நடிகராக இடம் பிடித்துள்ளார்.

படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பையும் கெட்டப்பையும் வெளிப்படுத்தி வரும் விக்ரம் அடுத்ததாக இளம் இயக்குனரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தன்னுடைய மகன் துருவ் உடன் இணைந்து நடிக்க உள்ளார்.

இந்தப் படத்திற்கு திறவுகோல் மந்திரவாதி என்ன டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவத் தொடங்கியது.

இதனையடுத்து படக் குழுவினருடன் விசாரித்ததில் அப்படி ஒரு டைட்டில் வைத்ததாக பரவும் தகவல் உண்மையல்ல என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

துருவ் விக்ரமின் இரண்டாவது படத்திலேயே நடக்கும் மாபெரும் மேஜிக் – யாருடன் இணைந்து நடிக்கப் போகிறார் தெரியுமா?

மேலும் வதந்திகளை நம்ப வேண்டாம் என படக்குழு கோரிக்கை வைத்துள்ளது.

விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, துருவ நட்சத்திரம் ஆகிய திரைப்படங்கள் அறிவிக்கை தயாராகி வருகின்றன.

கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார் துருவ நட்சத்திரம் படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.