Chiyaan 60 Movie Update

தன்னைவிட 7 வயது மூத்த நடிகையுடன் ரொமான்ஸ் செய்ய உள்ளார் நடிகர் துருவ் விக்ரம்.

Chiyaan 60 Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் துருவ் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக இரண்டு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் துருவ் உடன் இணைந்து அவருடைய அப்பா விக்ரம் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளன. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

அதேபோல் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார் என தகவல்கள் பரவி வந்த நிலையில் படக்குழு அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாணி போஜன் துருவ்வை விட வயதில் 7 வருடம் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 7 வயது மூத்த நடிகையுடன் துருவ் விக்ரம் ரொமான்ஸ் செய்ய இருப்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.