Chitra Pournami

🔱 பிறப்பு முதல் இறப்பு வரை ஞானத்தை அளிக்கும் அம்பிகைகள் இச்சா சக்தி, ஞான சக்தி கிரியா சக்தி இம்மூன்று தேவியர்களையும் பவுர்ணமிநாளில் வழிபாடு செய்தால் அனைத்து வளங்களையும் பெறலாம் என்பது ஐதீகம் ஆகும்.

🔱 சித்ரா பௌர்ணமி வெள்ளிக்கிழமையில் வருவது மிக மிக அரிதான ஒன்றாகும். இந்நாளில் அம்மனை தரிசனம் செய்தால் சகல பாவங்களிலிருந்தும் விலகி சௌபாக்கியம் பெறலாம் என்பதில் மாற்றம் இல்லை. மூன்று அன்னையர்களும் மண்ணுலகில் மூன்று திருத்தலங்களில் திருவுடையம்மன், வடிவுடையம்மன், கொடியிடை அம்மன் என்ற திருநாமங்களில் குடிகொண்டு அருள் கின்றனர். அவை மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் இம்மூன்று தலங்களிலும் சென்னை மாநகரை சுற்றியே அமைந்துள்ளன.

🔱 இச்சா சக்தி:
மூவரில் முதல் அன்னையாகவும், காரியம் அனைத்திலும் வெற்றியை வழங்கும் தேவியாகவும், விளங்குபவர் அருள்மிகு திருவுடையம்மன். திருவுடையம்மன் உடனாய திருமண ஈஸ்வரர் திருக்கோயில் மேலூர் (மீஞ்சூர் அருகில்).

🔱 ஞான சக்தி:
மூவரில் இரண்டாவது அன்னையாகவும், ஞானத்தை அருளும் தேவியாகவும் விளங்குபவள் அருள்மிகு வடிவுடையம்மன். அருள்மிகு வடிவுடையம்மன் உடனாய ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில் திருவொற்றியூர்.

🔱 கிரியா சக்தி:
மூவரில் மூன்றாவது அன்னையாகவும், முக்தியை அருளும் தேவியாகவும் விளங்குபவள் அருள்மிகு கொடியிடை அம்மன். அருள்மிகு கொடியிடை அம்மன் உடனாய மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் திருமுல்லைவாயில்.

🔱 பௌர்ணமி வழிபாடு:
அதிகாலையில் திருவுடை அம்மனையும், இரண்டாவதாக காலையிலேயே உச்சிப் பொழுதிற்கு முன் வடிவுடையம்மனையும், மூன்றாவதாக மாலையில் கொடியிடை அம்மனையும் தரிசனம் செய்ய வேண்டும். இங்கு செல்ல இயலாதவர்கள் அருகிலுள்ள அம்மன் தளங்களுக்கு செல்லுங்கள், அம்மன் அருள் பெறுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here