Chithra Fans Blast Pandian Stores Team

சித்ராவின் நினைவாக இருந்த அந்த ஒன்றையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மாற்றியிருப்பது ரசிகர்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.

Chithra Fans Blast Pandian Stores Team : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஹோட்டல் ஒன்றில் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சித்ராவின் தற்கொலையை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு பதிலாக காவியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அவரோடு சேர்த்து சித்ராவின் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து வந்த டப்பிங் ஆர்டிஸ்ட்டையும் சீரியல் குழு மாற்றியுள்ளது.

இதனால் முல்லை ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். சித்ராவின் நினைவாக இருந்தது அந்த ஒரு குரல் மட்டும் தான் இப்போது அதையும் மாற்றி விட்டீர்களே என சீரியல் குழுவை திட்டி தீர்த்து வருகின்றனர்.