Chiranjeevi in Ajith Movie Remake

வேதாளம் மற்றும் என்னை அறிந்தால் படத்தின் ரீமேக்கில் பிரபல நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chiranjeevi in Ajith Movie Remake : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் தற்போது ஆச்சார்யா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இதனை முடித்து விட்டு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார். அதுமட்டுமல்லாமல் தல அஜித்தின் வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் அனுஷ்கா திரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் கதையை எனக் கேட்டார் போல மாற்றி அமைக்குமாறு சாஹோ பட இயக்குனர் சுஜித்திடம் கூறியுள்ளார்.

கத்தி படத்தின் ரிமேக் மூலமாக திரையுலகில் ரி என்ட்ரி கொடுத்த இவர் அடுத்ததாக அஜித்தின் 2 படங்களின் ரிமேக்கில் நடிக்க உள்ளார் என்பது ஆச்சரியமான விஷயம் தான்.