கர்ப்பமாக இருந்ததே வெளியில் தெரியவில்லை அப்படி இருக்கையில் எப்படி இரட்டை குழந்தை பெற்றீங்க என்ற கேள்விக்கு சின்மயீ பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வருபவர் சின்மயி. இயக்குனராகும் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த இவருக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதனையடுத்து பலரும் அம்மாவான அவருக்கு வாழ்த்துக் கூறி வந்தனர்.

கர்ப்பமாக இருந்ததே தெரியல.. வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தையா? ரசிகர்களின் கேள்விக்கு கோபத்துடன் சின்மயி அளித்த பதில்

ஆனால் இதுவரை சின்மயீ கர்ப்பமாக இருந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் இருந்தது. இதனால் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றாரா என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழ சிலர் இதை சின்மயிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் நான் கர்ப்பமாக இருந்த விஷயங்கள் என்னுடைய நெருங்கிய வட்டங்களுக்கு மட்டும்தான் தெரியும். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மற்றவர்களுக்கு சொல்ல விருப்பப்படவில்லை. அவ்வளவு ஏன் அவ்வளவு எளிதாக கூட என்னுடைய குழந்தைகளின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட மாட்டேன்.

கர்ப்பமாக இருந்ததே தெரியல.. வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தையா? ரசிகர்களின் கேள்விக்கு கோபத்துடன் சின்மயி அளித்த பதில்

இன்னும் சொல்லப்போனால் நான் சிசேரியன் செய்து கொண்ட போது கூட ஒரு பஜனை பாடலை பாடினேன் என தெரிவித்துள்ளார்.