சின்மயி கர்ப்பமாக இருப்பதாக வெளியான புகைப்படத்திற்கு அவர் ஆவேச பதிலடி அளித்துள்ளார்.

Chinmayi Clarification to Fans : தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வருபவர் சின்மயி. சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமூக பிரச்சனைகள் குறித்து மட்டுமே பேசி வருகிறார். ‌‌ இப்போது தன்னுடைய குடும்ப புகைப்படத்தை இவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டதில்லை.

கர்ப்பமாக இருக்கிறேனா?? என் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்காதீங்க - வெளியான புகைப்படத்திற்கு சின்மயி ஆவேசம்.!!

இப்படியான நிலையில் சின்மயி சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். ‌ அந்த புகைப்படத்தில் அவர் புடவையில் இருந்ததால் கர்ப்பமாக இருப்பது போல தெரிந்தது. இதனால் சில யூடியூப் சேனல்கள் சின்மயி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தன‌.

கால்பந்துப் போட்டி : 28 ஆண்டுக்கு பின், முதல்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது டென்மார்க்

இதனால் கடுப்பான சின்மயி‌ நான் கர்ப்பமாக இல்லை. வதந்திகளை நம்பாதீர்கள். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்காதீர்கள். ஒருவேளை எனக்கு குழந்தை பிறந்தால் அந்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட மாட்டேன். குழந்தை வளர்ந்த பிறகும் சமூக வலைதள பக்கம் செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Beast Song Shoot | Allu Arjun Tamil Movie | Aishwarya Raejsh PhotoShoot | Mirichi Shiva | TrendingHD