Chinese Prawn

தேவையான பொருட்கள் :-
உரித்த இறால் – 500 கிராம்,
தக்காளி சாஸ் – 4 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் விழுது – 2 டீஸ்பூன்,
சைனீஸ் உப்பு – 1 சிட்டிகை
கார்ன்ஃபிளோர் – 4 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது – 4 டீஸ்பூன்,
முட்டையின் வெள்ளைப் பகுதி – 1
உப்பு – சி‌றிதளவு,
தண்ணீர் – சி‌றிதளவு,
எண்ணெய் – சி‌றிதளவு.

செய்முறை :-
1) முட்டையின் வெள்ளைப் பகுதி, கார்ன்ஃபிளோர், உப்பு, தண்ணீர், எண்ணெய் இவற்றைச் சேர்த்து ஒரு பேஸ்ட் தயாரிக்கவும்.
2) அந்த கலவையில் இறாலை 20 நிமிடம் ஊர வைக்கவும்.
3) தக்காளி சாஸ், சைனீஸ் உப்பு, மீதமுள்ள கார்ன்ஃபிளோர், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் வற்றல் விழுது ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும்.
4) தேவையான அளவு எண்ணெயைச் சூடாக்கி, ஊர வைத்த இறாலை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
5) சி‌றிதளவு எண்ணெயை சூடாக்கி தக்காளி சாஸ் கலவையை 1 நிமிடம் வதக்கவும்.
6) இதில் இறாலைக் கலந்து மேலும் 5 நிமிடம் வதக்கவும்.
7) இறால் – சைனீஸ் ஸ்டைல் ரெடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here