China‘s Master Plan : உலக நாடுகளை தன் வசப்படுத்திக் கொள்ள வளர்ந்த 68 நாடுகளுக்கு சீனா தாராளமாக கடன் கொடுத்து வருகிறது. உலக வங்கி இந்த 68 நாடுகளுக்கு கொடுத்த கடன் தொகையை விட சீனா கொடுத்தது கொஞ்சம் குறைவுதான்.

இருந்தாலும் இப்ப இருக்கிற கொரோனா சூழ்நிலைக்கு, பெரிய பெரிய வளர்ந்த நாடுகளே அடிவாங்கி, பொருளாதார வீழ்ச்சிக்கு தள்ளப்பட்ட நிலையில் உள்ளது.

2018-ம் ஆண்டு கணக்குப் படி, உலக வங்கி இந்த 68 வளரும் நாடுகளுக்கு கொடுத்திருக்கும் கடனில், பாக்கி நிலுவைத் தொகை, சுமாராக 103 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. இதுவே சீனாவுக்கு, இந்த நாடுகள் கொடுக்க வேண்டிய பாக்கி கடன் தொகை சுமாராக 101 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் கொடுத்திருக்கின்றனர்.

வாத்தி கம்மிங் பாட்டுக்கு வாழ்த்து தெரிவித்த Adam Morley

இலங்கைக்கும், சீனா கடுமையாக கடன் கொடுத்தது. இலங்கையால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்ற உடன், கடந்த 2017-ம் ஆண்டு, சீனாவுக்கு, ஹம்பந்தொட்டா துறைமுகத்தை, 99 ஆண்டு காலத்துக்கு, குத்தகைக்கு கொடுத்துவிட்டது. இது இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் செயல்.

இப்போ சீனா உலக நாடுகளுக்கு கடன் வழங்கி, நரி தந்திர வேலை பார்த்து வருவதால் இந்தியாவிற்கு தற்போது தலைவலியாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.