STR
STR

மீ டூ குறித்து தொடர்ந்து ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் சின்மயி தற்போது சிம்பு ரசிகர்களை கோபமாக்கும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மீ டூ என்ற இயக்கத்தின் மூலம் நடிகைகள் மட்டுமில்லாமல் உலகம் முழுவதில் இருந்தும் பல துறைகளை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை பற்றி பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கெட்டவன் படத்தில் நடித்திருந்த லேக்கா வாஷிங்டன் என்பவர் மீ டூ குறித்து ஒற்றை வரியில் பதிவு செய்திருந்தார். ஆனால் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.

தற்போது லேக்காவின் இந்த டீவீட்டிற்கு ஆதரவு தெரிவித்து பாடகி சின்மயி ஒரு டீவீட்டை பதிவு செய்துள்ளார். இது சிம்பு ரசிகர்களை கோபடைய செய்துள்ளது.

இதனால் ரசிகர்கள் பலரும் லேகா வாஷிங்டனையும் சின்மயியையும் விமர்சித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.