China Ready to Join With India
China Ready to Join With India

China Ready to Join With India : இந்தியா-சீனா இரு நாடுகளுக்கிடையேயானவேறுபாடுகளை களைய முறையான நடவடிக்கை எடுக்கவும், இரு நாட்டு நல்லுறவை பாதுகாக்கவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று சீனா திடீரென்று பல்டி அடித்தது.

இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், இந்தியா எல்லை நான் சவால் விடும் விடும் அவர்களுக்கு தக்க பதில் கொடுத்திருக்கின்றனர்.

தொடர்ந்து இதுபோன்று நாட்டின் இறையாண்மை மீது தவறான கண்ணோட்டத்தை முன்வைக்கும் அவர்களுக்கு புரியும் மொழியில் நமது பாதுகாப்பு படையினர் பதிலளிப்பார் என்று பேசினார்.

இதுகுறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் லிஜியன் கூறியதாவது:

எங்க படத்தை தமிழ் ராக்கர்ஸில் படம் பார்த்தால் உங்கள் மீது நடவடிக்கை பாயும் – பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எச்சரிக்கை!

“இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையை சீனாவும் கவனத்தில் கொண்டுள்ளது. இந்தியாவும் சீனாவும் அண்டை நாடுகள் என்பதோடு நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்று வரும் நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இரு நாடுகளிடையேயான நல்லுறவு என்பது இரு நாட்டு மக்களின் நலன்களை சார்ந்தது மட்டுமின்றி இரு நாடுகளின் நிலைத்தன்மை அமைதி மற்றும் ஒட்டுமொத்த உலகின் மேம்பாட்டையும் சார்ந்ததாகும்.

எனவே சீனாவைப் பொறுத்தவரைஇருநாடுகளுக்கு இடையேயான வேறுபாட்டை களைய முறையான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், நீண்ட கால வளர்ச்சியை பாதுகாக்கவும் இந்தியாவுடன் இணைந்து சீனா பணியாற்ற தயாராக இருக்கிறது” என்று அவர் கூறினார்.