
China Open BadMinton : சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி நேற்று நடைபெற்றது. நேற்று நடந்தது இறுதி போட்டி ஆகும். இப்போட்டியில் ஜப்பான் வீரர் மற்றும் தைவான் வீரர் மோதினர்.
நேற்று நடந்து முடிந்த சீன ஓபன் பாட்மிண்டன் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் மற்றும் ஜப்பான் வீரர் மொமடோ வெற்றி பெற்றார். அபாரமாக விளையாடி பட்டத்தை வென்றார்.
மேலும் மொமடோ பற்றி கூற வேண்டும் என்றால் ஒரு வரியில் கூறிவிட முடியாது. தற்போதய இவரின் நிலையில் இருந்தே குறிப்பிடலாம்.
அதாவது இவர் தற்போதய நடப்பு சாம்பியனாகவே இப்போட்டியில் பங்குபெற்றது மட்டும் இல்லாமல் தொடரின் கோப்பையை வென்றுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் 24 வயது உடைய இளம் வீரரான இவர் நடப்பாண்டு சாம்பியன், ஆசிய சாம்பியன் மற்றும் 4 உலக சுற்று போட்டிகளில் பட்டம் வென்றவர்.
இவரை பற்றி குறிப்பிட தக்க விஷயம் கடந்த 2016-ல் ரியோ ஒலிம்பிக் போட்டியில் சட்டவிரோதமாக கேசினோவுக்கு சென்றதாக எழுந்த புகாரின் பெரில் இவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.