தல அஜித்தின் துணிவு திரைப்படத்தின் சில்லா சில்லா பாடல் யூடியூபில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

கோலிவுட்டில் மாபெரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் குமார். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள “துணிவு” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

இதயங்களையும் தரவரிசைகளையும் வென்று… NO.1 இடத்தில் மாஸ் காட்டும் சில்லா சில்லா பாடல்.!!

இப்படத்தில் இருந்து வெளியான எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் மற்றும் 2 சிங்கள் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் ஜிப்ரானிசையில் வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான சில்லாசில்லா பாடல் தரவரிசை பட்டியலை வென்று யூட்யூபில் #1 முதல் இடத்தில் உலகளாவிய சிறந்த இசை வீடியோவாக இடம் பிடித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை ஜி மியூசிக் சவுத் நிறுவனம் பதிவின் மூலம் தெரிவித்துள்ளது.