Children Health
Children Health

Children Health : ▪ குழந்தைகள் உடல் பலம் பெற குழந்தைகளுக்கு தேங்காயை சிறிய கீற்றுகளாக நறுக்கி கடித்து சாப்பிட கொடுக்கலாம். பசும் பாலை விட சக்தி வாய்ந்தது.

▪ குழந்தைகளுக்கு கண் சூடு குறைய நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து கொடுத்து வர குணமாகும்.

▪ காய்ந்த மஞ்சளை பொடி செய்து தேங்காய் எண்ணையில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர குழந்தைகளுக்கு ஏற்படும் கண் நோய் குணமாகும்.

▪ பேய்மிரட்டி இலைச்சாறை 5 துளி அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வருவதால் பற்கள் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்கும்.

▪ கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழம் சாப்பிட்டு வர பிறக்கும் குழந்தை ஊட்டச் சத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கைகால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

▪ குழந்தை வளர்ச்சி பெற பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.

▪ குழந்தைகளுக்கு நொறுக்கு தீனிக்கு பதிலாக முழு தானியங்கள் கொண்ட உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். இது அவர்களின் உடல் வளர்ச்சியை சிறப்பான அளவில் மேம்படுத்தும்.

▪ காலை உணவுகளில் அதிக அளவு தானியங்களை சேர்த்துக்கொண்டால் நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும்.

▪ அலுமினியம், எவர்சில்வரால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் தவிர்க்க சொல்லித்தர வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here