நடிகை ஜெனிலியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் கியூட் புகைப்படம் இணையத்தில் கலக்கி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் ஜெனிலியா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார். தமிழில் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஜெனிலியா பின்னர், நடிகர் விஜய், பரத், தனுஷ் ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடித்து தனது குழந்தைத்தனமான நடவடிக்கையால் பல ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்திருந்தார். அதன் பிறகு தன் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திரைத்துறையை விட்டுவிலகிய இவர் மறுபடியும், ஒரு சில படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

குழந்தைத்தனம் மாறாத ஜெனிலியா!!… இணையத்தை கலக்கும் க்யூட் புகைப்படம்!.

மேலும் எப்பொழுதும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஜெனிலியா அடிக்கடி தனது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை தன்னை ரசிக்கும் படி செய்து வருவார். அந்த வகையில் இரண்டு குழந்தைகளை பெற்ற ஜெனிலியா தற்பொழுதும் இளமையாக குழந்தைத்தனம் மாறாமல் எடுக்கப்பட்டிருக்கும் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியீட்டு ரசிகர்களை புத்துணர்ச்சி அடைய செய்துள்ளார். அந்த லேட்டஸ்ட் ஆன புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.