Chicken Handi
Chicken Handi

Chicken Handi :

தேவையான பொருட்கள் :

1. சிக்கன் – ½ கிலோ

2. வெங்காயம் – 2

3. தக்காளி – 2

4. இஞ்சி-பூண்டு விழுது – 2 ஸ்பூன்

5. சீராக பொடி – 1 ஸ்பூன்

6. மஞ்சள் தூள் – ½ தூள்

7. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

8. உப்பு – தேவைக்கு

9. எண்ணெய் – தேவைக்கு

10. தானிய தூள் – 2 ஸ்பூன்

11. தயிர் – 1 கப்

12. கசூரி மேத் – சிறிது

13. பிரஸ் கிரீம் – 100 கிராம்

14. கரம் மசாலா – 1 ஸ்பூன்

15. கசூரி பவுடர் – 1 ஸ்பூன்

16. கொத்தமல்லி – சிறிது

17. பூண்டு – 6 பல்

18. பச்சை மிளகாய் – 2

செய்முறை :

கடாயில் நெய், எண்ணெய் விட்டு அதில் 6 பல் பூண்டை நறுக்கி போட்டு வதக்க வேண்டும் பின் அதில் வெங்காயம் போட்டு பொன் நிறமாகும் வரை வதக்க வேண்டும் வெங்காயம் வதங்கியதும் அதில் பச்சை மிளகாய் போட்டு, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு அதில் 2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும் பிறகு அதில் தக்காளி போட்டு வதக்க வேண்டும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் தானிய தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சீராக தூள் சேர்த்து வதக்க வேண்டும் பச்சை வாசம் போனதும் அதில் சிக்கணை சேர்த்து கலக்கி விட்டு சிறிது தண்ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும்.

மசாலாயுடன் சிக்கன் சேர்ந்து வெந்ததும் அதில் 1 கப் தயிர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதில் தேவைக்கு உப்பு மற்றும் மசூரி மேத் சேர்த்து கிளறி விட்டு அடுப்பை குறைத்து 6-7 நிமிடம் விட வேண்டும்.

பின், அதில் 100 கிராம் பிரஸ் கிரீம், சீராக தூள் மசூரி தூள் போட்டு கிளறி விட்டு பிறகு அதில் கொத்துமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான சிக்கன் ஹண்டி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here