Chicken Fried Rice
Chicken Fried Rice

Chicken Fried Rice :

தேவையான பொருட்கள் :

1. பாஸ்மதி ரைஸ் – ½ கிலோ

2. எலும்பிச்சை சாறு – 2 ஸ்பூன்

3. எண்ணெய் – தேவைக்கு

4. சிக்கன் – ½ கிலோ

5. மிளகாய் தூள் – 5 ஸ்பூன்

6. மஞ்சள் தூள் – 3 ஸ்பூன்

7. மிளகு தூள் – 3ஸ்பூன்

8. இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்

9. உப்பு – தேவைக்கு

10. கேரட் – ½ கப்

11. குடைமிளகாய் – ½ கப்

12. பீன்ஸ் – ½ கப்

13. கோஸ் – 1 கப்

14. வெங்காய தாள் – ஒரு பிடி

15. முட்டை – 3

16. சில்லி சாஸ் – 2 ஸ்பூன்

17. சோயா சாஸ் – 1 ஸ்பூன்

செய்முறை :

முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய், 2 ஸ்பூன் எலும்பிச்சை சாரு சேர்த்து பாஸ்மதி அரிசியை 5 நிமிடம் ஊற வைத்து வெக வைத்துகொள்ள வேண்டும்.

½ சிக்கனை தோல் மற்றும் எலும்பு நீக்கி நல்ல சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள், உப்பு, ½ ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊற வைத்து பின் அதனை எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் கோஸ், குடைமிளகாய் சிறுது வெங்காய தாள் சேர்த்து பாதி வெக வைக்க வேண்டும்.

பின் அதில் மூன்று முட்டை உடைத்து காய்கறி கலவையில் போட்டு கிளறி விட்டு அதில் மிளகு தூள், சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ், உப்பு சேர்த்து கலந்து விட்டு பின் அதில் வடித்து வைத்துள்ள சாதம் போட்டு கிளறி பின் அதனுடன் வறுத்த சிக்கன் போட்டு முடிந்த அளவிற்கு நன்றாக மிக்ஸ் பண்ண வேண்டும். கடைசியாக அதில் வெங்காய தாள் தூவி இறக்கினால் சுவையான சிக்கன் ஃரைடு ரைஸ் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here